அனைவருக்கும் ஆரோக்கியமான, மிகவும் சமமான உலகத்தை உருவாக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். R21 மலேரியா தடுப்பூசியை உருவாக்குவதில் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆற்றிய பங்கை நினைத்து நான் மிகுந்த பெருமைப்படுகிறேன். தடுப்பூசி தயாரிப்பை அதிகப்படுத்தி தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் எளிமையாக கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஏற்கனவே ஆண்டுக்கு 100 மில்லியன் டோஸ்களுக்கான உற்பத்தி திறனை நிறுவியுள்ளது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரட்டிப்பாகும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மற்றும் வளரும் நாடுகளின் மருத்துவ பரிசோதனை கூட்டாண்மை (EDCTP), வெல்கம் டிரஸ்ட் மற்றும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி ஆகியவற்றின் ஆதரவுடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள ஜென்னர் நிறுவனம் மற்றும் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆகியவற்றால் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டது.
மலேரியாவுக்கான இந்தத் தடுப்பூசி விலை குறைந்தது, அதிக திறன் வாய்ந்தது, மேலும் அதிகளவில் தயாரிக்கப்பட உள்ளதால் மலேரியாவால் உயிர் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு கவசமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.