சென்னை: குறுவை பயிர் காப்பீடு செய்வதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜூலை மாதம் 31ம் தேதிக்குள் குறுவை பயிருக்கான காப்பீடு செய்ய வேண்டுமென்று ஏற்கனவே ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில், காப்பீடு செய்வதற்கான நிறுவனம் எது என்று தமிழ்நாடு அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே, குறுவை பயிர் காப்பீடு செய்வதற்கான காப்பீட்டு நிறுவனம் எது என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும். மேலும் குறுவை பயிர் காப்பீடு செய்வதற்கான காலத்தை ஆகஸ்ட் 20ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.
குறுவை பயிர் காப்பீடு அறிவிப்பு அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை
Share
