தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய இளம் படை, நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 – 1 எனக் கைப்பற்றி அசத்தியிருக்கிறது. இந்த வெற்றியானது, எப்போதும் போல ஒரு வெற்றி என்பதைக் கடந்து, எந்த அணியையும் எதிர்கொள்ள அடுத்த தலைமுறை இளம் அணித் தயாராக இருக்கிறது என்பதை உணர்த்தியிருக்கிறது. குறிப்பாக, டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு ரோஹித், கோலி, ஜடேஜா ஆகிய மூன்று சீனியர் வீரர்களும் ஒய்வை அறிவித்தபிறகு அணியில் ஏற்பட்ட வெற்றிடங்களை, நிரப்பிக் காட்டியிருக்கிறது இந்த இளம்படை.
`குறி வச்சா இரை விழணும்’ – வலுவாக உருவாகும் இளம் படை; கலக்கிய சஞ்சு, திலக், வருண்| IND v SA ஹைலைட்ஸ் | Sanju samson Tilak varma Varun chakaravarthy excellent perfomance agains SA cricket team
Share