குடும்பத் தகராறில் சுட்டுக் கொல்லப்பட்ட தந்தை; மனைவியுடன் கைதான மகன்! – என்ன நடந்தது? | UP Shocker: Retired school teacher shot dead by son, daughter-in-law

Share

உத்தரப்பிரதேச மாநிலம், பதாவுன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்பால். 65 வயதான இவர் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஹரிஷ், விபின் சிங் என இரண்டு மகன்கள். மனைவி மரணத்துக்குப் பிறகு இளைய மகன் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று சந்தைக்குச் சென்று திரும்பும்போது அடையாளம் தெரியாத நபர்களால் சத்பால் சுட்டுக் கொல்லப்பட்டார். உடனே சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை உடலை மீட்டு, இந்தக் கொலை தொடர்பாக விசாரிக்கத் தொடங்கியது.

தந்தையை சுட்டுக் கொன்ற மகன்

தந்தையை சுட்டுக் கொன்ற மகன்

விசாரணையில் பல தகவல்கள் வெளியாகின. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீஸார், “சுட்டுக் கொல்லப்பட்ட சத்பாலுக்கு யாருடனும் பகை இருக்கிறதா என விசாரித்ததில் நெருங்கிய உறவுகள் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்தது. அப்போதுதான் இளையமகன் விபினுக்கும் சத்பாலுக்கும் இடையே பிரச்னை நடந்ததும்… அதைத் தொடர்ந்து சமீபகாலமாக மூத்த மகன் ஹரிஷ் வீட்டில் சத்யபால் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதற்கு முன்பு, சத்யபால் தன் இளைய மகன் விபின் சிங், மருமகள் பூஜாஆகியோருக்கு ஒரு டிராக்டர் மற்றும் ஒரு கார் வாங்கிக் கொடுத்து, பால் பண்ணை வைக்கவும் உதவியிருக்கிறார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com