விபத்து மற்றும் உயிர் காக்கும் முக்கியமான சூழலில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுவார். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவின் கீழ் ஒரு நோயாளி அனுமதிக்கப்பட வேண்டிய மருத்துவ நிலைமைகள் குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.
24 டாப் மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவால் இந்த வழிகாட்டுதல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், நோயாளி உயிர்வாழ்வது சாத்தியமில்லாமல் போகும்போது அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சையளிப்பது பயனற்றது என மருத்துவக் குழு கூறியுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய வழிகாட்டுதலின்படி,
தீவிர சிகிச்சை பிரிவுக்குள் யாரெல்லாம் அனுமதிக்கப்படலாம்…?
*உடல் உறுப்பு செயலிழந்தவர்கள் (organ failure) மற்றும் உறுப்பு தேவையுள்ளவர்கள் அல்லது மருத்துவ நிலை மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுபவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கலாம்.
*சுவாச பிரச்னை உள்ளவர்களுக்கு உதவி தேவைபடும்பட்சத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கலாம்.
*இதய பிரச்னை, சுவாச பிரச்னைகளோடு, பெரிய அறுவைசிகிச்சையை எதிர்கொண்ட நோயாளிகள் மற்றும் பெரிய அறுவை சிகிச்சையை எதிர்கொள்ள உள்ளவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கலாம்.