இது தொடர்பாக அத்தம்பதி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி இது குறித்து விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதோடு அப்பெண் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆரம்ப சுகாதார மையம், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.6 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். தற்போது தேவி குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பிறகு மூன்றாவது முறையாக மீண்டும் கர்ப்பமாகி இருக்கிறார்.
இது குறித்து ஆரம்ப சுகாதார மைய அதிகாரிகள் தெரிவித்தபோது, ’விசாரணை நடந்து வருகிறது’ என்று மட்டும் கூறியிருக்கின்றனர்.
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் செய்யும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளில் மருத்துவ தவறுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.