குஜராத் தேர்தல்: டிசம்பர் 1, 5-ஆம் தேதிகளில் சட்டப் பேரவைக்கு வாக்குப்பதிவு

Share

குஜராத்

பட மூலாதாரம், Getty Images

குஜராத் சட்டப் பேரவைக்கு டிசம்பர் 1, 5-ஆம் தேதிகளில் தேர்தல் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி வெளியிடப்படும்.

வழக்கமாக குஜராத் மாநில தேர்தல்கள் நவம்பரில் நடக்கும், இந்த முறை முழுவதும் டிசம்பர் மாதத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தகவல்கள்

  • குஜராத் தேர்தலில் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
  • இந்த முறை குஜராத்தில் 4 கோடியே 90 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க முடியும்.
  • குஜராத் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க சுமார் மூன்று லட்சத்து 24 ஆயிரம் இளைஞர்கள் தகுதி பெற்றிருக்கிறார்கள்.
  • குஜராத்தில் சுமார் 9 லட்சத்து 80 ஆயிரம் மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் உள்ளனர்
  • போலிச் செய்திகளைக் கையாள்வதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • போலியான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என ஊடகங்களுக்கு வேண்டுகோள்

குஜராத்தில் 4.9 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 2.53 கோடி. பெண் வாக்காளர்கள் 2.37 கோடி பேர். கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 4.6 லட்சம் அதிகரித்துள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com