குஜராத் அணியை 143 ரன் வித்தியாசத்தில் வென்றது மும்பை இந்தியன்ஸ்

Share

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அறிமுகப் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை 143 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி மும்பையின் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக யஸ்திகா பாட்டியா, ஹேலி மேத்யூஸ் ஆகியோர் களத்தில் இறங்கினர். யஸ்திகா 1 ரன்னில் வெளியேற அடுத்து இணைந்த ஹேலி – நேட் சீவர் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. ஹேலி 47 ரன்னும், நேட் சீவர் 23 ரன்னும் எடுத்து வெளியேறினர். இதையடுத்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் – அமெலியா கெர் இணை இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 89 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் கவுர் 30 பந்தில் 14 பவுண்டரியுடன் 65 ரன்கள் எடுத்தார்.

அமெலியா கவுர் 24 பந்தில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 207 ரன்கள் குவித்தது. குஜராத் தரப்பில் ஸ்னே ராணா 2 விக்கெட்டுகளை எடுத்தார். 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் இறங்கினர். மும்பை பவுலர்களின் அதிரடியான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் குஜராத் அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன.

தொடக்க வீராங்கனைகள் சபினேனி மேகனா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் பெத் மூனி ரன் ஏதும் எடுக்காத நிலையில் காயம் காரணமாக ஆட்டத்தை விட்டு வெளியேறினார். ஹர்லின் தியோல், ஆஷ்லே கார்டனர் ரன் ஏதும் எடுக்காமல் நடையைக் கட்டினர். அனாபெல் சதர்லேண்ட் 6 ரன்கள் எடுத்தார். சிறிதுநேரம் தாக்குப் பிடித்த தயாளன் ஹேமலதா 2 சிக்சர் 1 பவுண்டரியுடன் 29 ரன்கள் சேர்த்தார். 15.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழநத குஜராத் அணி 64 ரன்கள் மட்டுமே எடுத்து 123 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மும்பை தரப்பில் சைகா இஷாக் 4 விக்கெட்டுகளையும், அமேலியா கெர், நேட் சீவர் ப்ரன்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com