என்னதான் கீரையில் ஏராளமான சத்துக்கள் இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரிந்தாலும் அதை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இன்னும் நம்மில் பல பேர் கீரை என்று சொன்னாலே முகம் சுழிப்பவர்கள் கூட உண்டு. அப்படி இருப்பவர்கள் இது போல் கீரையில் தொக்கு செய்து கொடுத்து பாருங்கள். கீரையை வெறுப்பவர்கள் கூட விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
- கீரை – 1 கட்டு
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
- வெங்காயம் – 2
- பூண்டு பல் – 15
- பச்சை மிளகாய் – 1
- தக்காளி – 2
- புளி – 1 எலுமிச்சை பழ அளவு
- காய்ந்த மிளகாய் – 5
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- உப்பு – 1/2 டீஸ்பூன்
- கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – தாளிக்க

செய்முறை :
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், வெந்தயம் செர்த்து பொரிந்ததும் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
பின்னர் புளி காய்ந்த மிளகாய், மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து தக்காளி பாதி அளவு வேகும் வரை வதக்கி கொள்ளுங்கள்.
இவையெல்லாம் ஓரளவுக்கு வதங்கிய பிறகு நீங்கள் வாங்கி வைத்திருக்கும் கீரையை சுத்தம் செய்து இதில் சேர்த்துக் கொள்ளவும்.
கீரையை வதக்கிய வெங்காயம் தக்காளியுடன் சேர்த்த பிறகு ஒரு முறை கலந்து விட்டு மூடி போட்டு ஐந்து நிமிடம் வரை வெந்த பின்னர் அடுப்பை அனைத்து விடுங்கள்.
கீரை நன்கு ஆரிய பின்னர் மிக்ஸியில் போட்டு ஒரே ஒரு முறை மட்டும் பல்ஸ் மோடில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள்.
மீண்டும் அடுப்பில் அதே கடாயில் அரைத்த கீரையை சிறிது நேரம் கொதிக்க விடுங்கள்.
மற்றொரு புறம் தாளிப்பு கரண்டியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, சீரகம் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் என அனைத்தையும் சேர்த்து இந்த தாளிப்பை கொதித்துக் கொண்டிருக்கும் கீரையில் சேர்த்து கிளறிய பின்னர் அடுப்பை அனைத்து விடுங்கள்.
ஒரு முறை இந்த கீரையை வழக்கமான பொரியலுக்கு பதில் இப்படி செஞ்சு சாப்பிட்டீங்கன்னா இனி எப்போ கீரை வாங்கினாலும் இது போல தான் செய்வீங்க அந்த அளவுக்கு சுவை அட்டகாசமா இருக்கும் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Keerai Recipe in Tamil