கீரையில் இத்தனை வெரைட்டியா.. கீரையை ருசியாக சமைப்பது எப்படி?

Share

சத்துக்களை அள்ளித்தரும்கீரை வகைகள்..பாவூர்சத்திரம் கீரை விவசாயம்.. பலவிதமான ஊட்டச்சத்துக்களை நமக்கு அள்ளித் தருவது முதன்மை வகிக்கின்றது கீரை. ஆனால் நம்மில் பலரோ கீரையை உணவில் சேர்ப்பதில் சற்று தயக்கம் காட்டிய வருகின்றோம்.

ஆனால், இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கழகம் பரிந்துரையின் படி தனிநபர் உணவில் நாள் ஒன்றுக்கு 100 கிராம் கீரையைசேர்க்க வேண்டியது அவசியம் என்று கூறப்படுகிறது.

நார்ச்சத்து, போலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், வைட்டமின் ஏ, கே, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற முக்கிய சத்துகள் பல கீரையில் உள்ளது. வருடம் முழுவதும், அனைத்து காலங்களிலும் கீரைகளை பயிரிடலாம். கீரைகள் குறுகிய காலப் பயிர் என்பதால், விரைவிலேயே அறுவடை செய்து விடலாம். அதோடு, ஒரு முறைப் பயிரிட்டால், பல முறை மகசூல் எடுப்பது, கீரையின் தனிச்சிறப்பு.

கீரையில் 40க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. ஒவ்வொன்றிலும் தனி நன்மைகளும் உண்டு. அரைகீரை, சிறு கீரை, தண்டு கீரை, பொன்னாங்கன்னி கீரை ஆகியவை அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

பசலை கீரை,கொடி பசலை கீரை, குப்பை கீரை, வல்லாரைக் கீரை, பருப்பு கீரை, புளிச்சக்கீரை, கீரை என பல கீரை வகைகளையும் அதன் நன்மைகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம். தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதில் கீழப்பாவூரில் கீரை விவசாயம் செய்து வருபவர்களிடம் இதைப் பற்றி மேலும் கேட்டு தெரிந்து கொள்வோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com