கிருஷ்ணர் ஆட்சி செய்த ‘துவாரகை’ உண்மையில் இருந்ததா? – கடலில் மூழ்கிய ஒரு நகரத்தின் தேடல்

Share

கிருஷ்ணர் ஆட்சி செய்த 'துவாரகை' உண்மையில் இருந்ததா?

“துவாரகை நகரத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. மஹாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகள் நடந்ததாகச் சொல்லப்படும் காலகட்டத்தைச் சேர்ந்த ஒரே இடமாக அது உள்ளது,” என்கிறார் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் கூடுதல் தலைமை இயக்குநரான முனைவர்.அலோக் திரிபாதி.

“நான் ஒரு நீரடி தொல்லியல் ஆராய்ச்சியாளர். இந்திய நீர்நிலைகளில் மூழ்கிப்போன தொன்மையான இடங்களின் தேடலில் நான் ஈடுபட்டுள்ளேன்,” என்று கூறும் டாக்டர் அலோக் திரிபாதி, “நீருக்கு அடியில் ஆய்வு மேற்கொள்ளும் தொல்லியல் ஆய்வுப் பிரிவால் ஒரு மிகப்பெரிய அகழ்வாராய்ச்சி துவாரகையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த இடம் வரலாறு மற்றும் சமய முக்கியத்துவத்திற்காகப் புகழ்பெற்றது. இது அகழ்வாராய்ச்சியிலும் முக்கியத்துவம் பெற்ற ஓர் இடம்,” என்று துவாரகை ஆராய்ச்சி குறித்துக் குறிப்பிட்டார்.

மகாபாரதம் சொல்லும் துவாரகை நகரம்

இந்தியாவின் 7 புனித யாத்திரை தலங்களில் துவாரகையும் ஒன்று. புராண காவியமான மகாபாரதத்தில் கிருஷ்ணரின் சாம்ராஜ்யமாக இந்த நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com