வீட்டில் சில்லி சிக்கன், சிக்கன் 65, பட்டர் சிக்கன், சிக்கன் கிரேவி,சிக்கன் தந்தூரி என்று எதை செய்து கொடுத்தாலும் அடுத்த நிமிடமே காலி ஆகி விடும். அந்த வகையில் சிக்கன் ரெசிபிகளில் ஒன்றான சிக்கன் லாலிபாப் ரெசிபியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் லாலிபாப் -8பீஸ்
முட்டை-1
இஞ்சி பூண்டு பேஸ்ட்-2 டீஸ்பூன்
கார்ன் பிளார் -5 டீஸ்பூன்
மைதா மாவு -2 டீஸ்பூன்
சோயா சாஸ்-1 டீஸ்பூன்
லெமன் ஜூஸ் -1/2 பழம்
தயிர்-50 மில்லி
மிளகுதூள்- 1 டீஸ்பூன்
காஷ்மீர் மிளகாய் தூள் -2 டீஸ்பூன்
ரெட் புட் கலர்-1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை :
1. முதலில் சிக்கனை நன்றாக அலசி விட்டு ஒரு பவுளில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பெரிய பௌலில் கார்ன் பிளார், மைதா, உப்பு மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
2.பின் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், கெட்டி தயிர், மிளகுத்தூள் மற்றும் காஷ்மீர் மிளகாய் தூள் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்கு பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. பின் அதில் 1 முட்டையை உடைத்து ஊற்றிக் கொண்டு 1பின்ச் புட் கலர் சேர்த்துக் கொண்டு நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். பின் இந்த பௌலில், அலசி வைத்துள்ள சிக்கன் சேர்த்து நன்றாக பிரட்டிக் கொண்டு சுமார் 1 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
4. இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றிசூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பின் அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து சிறிது எண்ணெயை சிக்கனில் தெளித்து விட்டு ஒரு முறை பிரட்டி கொள்ள வேண்டும்.
5. இப்போது ஊறிய சிக்கன் லாலி பாப் துண்டுகளை எண்ணெயில் போட்டு, பொரித்து எடுத்தால் அட்டகாசமான சுவையில் சிக்கன் லாலி பாப் ரெடி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.