உடனே, அவருடன் விளையாடிக் கொண்டிருந்த நண்பர்கள் பதறிப் போனார்கள். அவரை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், இறந்த நிலையில் அவர் கொண்டுவரப்பட்டிருக்கிறார் என அறிவித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நண்பர், கண்முன்னே மாரடைப்பால் இறந்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
குஜராத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் கிரிக்கெட் விளையாடுகையில் மாரடைப்பால் இறந்து போன நிகழ்வு எட்டாவது முறையாக நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் மயூர்தான் என்றும், அவருக்கு எந்த விதமான போதைப்பழக்கமும் இல்லை என்றும் அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.