ஐ.பி.எல் அணியின் உரிமையாளர் (பார்த் ஜிண்டால்) பயிற்சியாளர் பொறுப்பை பிரித்துக் கொடுப்பது பற்றிக் கூறினார்.
இது ஒரு ஆச்சரியமான விஷயம். அவரவர் தங்கள் வரம்புக்குள் இருப்பது நல்லது. நாம் ஒருவரின் வரம்புக்குள் செல்லாதபோது, அவர்களும் நம் வரம்புக்குள் வர எந்த உரிமையும் இல்லை” என்று கூறினார்.

கம்பீரின் இத்தகைய பேச்சைத் தொடர்ந்து, `தென்னாப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட்டில் வெறும் 124 ரன்கள் டார்கெட்டை அடிக்கக் கூட 7 போட்டிகளில் 1,000 ரன்கள் அடித்த கேப்டன்தான் வேண்டுமா? அவர் மட்டும் இந்திய அணியில் வீரரா மற்றவர்கள் எல்லாம் வெறுமனே அணியில் இருக்கிறார்களா?” என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
முன்னதாக, 2018-ல் கொல்கத்தா அணி கம்பீரை ஏலத்தில் விட்டபோது பார்த் ஜிண்டாலின் டெல்லி அணி ரூ. 2.80 கோடிக்கு எடுத்து அணியின் கேப்டனாக்கியது.
ஆனால், கம்பீர் தலைமையில் டெல்லி அணி மோசமாக ஆடியதால் பாதியிலேயே தொடரிலிருந்து விலகியதோடு தனது சம்பளத்தையும் கம்பீர் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்தியா இவ்வாறு மோசமாகத் தோல்வியடையும்போது கேள்வியே எழுப்பக்கூடாது என்பது என்று கம்பீர் கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.