கால்பந்தாட்ட போட்டியில் பாகிஸ்தானை வென்றது இந்திய அணி… 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி

Share

பாகிஸ்தானுக்கு எதிரான கால்பந்தாட்ட போட்டியில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். SAFF எனப்படும் தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் சாம்பியன்ஷிப் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் ஏ-யில் இந்தியா, பாகிஸ்தான், குவைத், நேபாளம் அணிகளும், குரூப் பி பிரிவில் லெபனான், மாலத்தீவுகள், பூடான் மற்றும் வங்கதேச அணிகளும் இடம்பெற்றுள்ளன.

பெங்களூரு ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இரவு 7.30 தொடங்கிய இந்த ஆட்டம் ஆரம்பம் முதலே பரபரப்பாக காணப்பட்டது. 10 ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி அற்புதமாக கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். 18 ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தபோது அதையும் கோலாக மாற்றினார் இந்திய அணியின் கேப்டன்.

இதன்பின்னர் முதல் பாதியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து 2-0 என்ற முன்னிலையுடன் 2 ஆவது பாதியில் இந்திய அணியினர் உற்சாகத்துடன் விளையாடினர். இந்த முறை இந்தியாவுக்கு சவால் அளிக்கும் வகையில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடியதால் பரபரப்பு காணப்பட்டது. ஆட்டத்தின் 74 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கேப்டன் சுனில் சேத்ரி லெஃப்ட் கார்னரில் அடித்து கோலாக மாற்றினார்.

இதையும் படிங்க – ரோஹித் சர்மாவுக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் யார்? தேர்வுக்குழு முன்னாள் தலைவர் பரபரப்பு கருத்து

81 ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் உதந்தா சிங் 1 கோல் அடிக்க, இந்திய அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பின்னர் ஆட்ட நேரம் முடியும் வரையில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாத நிலையில், இந்திய அணி இந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது. ஹாட்ரிக் கோல் அடித்து இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com