காலை உணவில் தானியமா… மார்பக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் – ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்!| Study says, most of the breakfast with cereals heightened risk of breast cancer

Share

அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட தகவல்கள்…

* அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Ultra -processed food), கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் (colas), பேக் செய்யப்பட்ட பிரெட், ரெடி டூ ஈட் உணவுகளை உண்பது புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயங்களை அதிகரிக்கிறது.

* பெரும்பாலான காலை உணவுகளில் தானியங்களை எடுத்துக் கொள்வது, புற்றுநோய் வருவதற்கான அபாயங்களை அதிகரிக்கிறது.

* அதீத அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது, புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கிறது. அதிலும் கர்ப்பப்பை மற்றும் மூளையில் புற்றுநோயை ஏற்படுத்தலாம். 

* இதனால், புற்றுநோயால் இறக்கும் அபாயமும் உண்டு. குறிப்பாகக் கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய்களால் இறக்கும் அபாயம் அதிகம்.  

ஒரு நபரின் உணவில், தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளின் ஒவ்வொரு 10 சதவிகித அதிகரிப்பும்… 

~ ஒட்டுமொத்தமாகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை 2 சதவிகிதம் ஏற்படுத்துகிறது. 

~ கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை, 19 சதவிகிதம் ஏற்படுத்துகிறது.

~ 6 சதவிகிதம் புற்றுநோய் இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 

~ அத்துடன் மார்பகப் புற்றுநோயில் 16 சதவிகிதம், கர்ப்பப்பை புற்றுநோயில் 30 சதவிகிதம் அதிகரிப்பதற்கான அபாயம் உள்ளது. 

~ இங்கிலாந்தில் உள்ள பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடல் பருமனாதல், டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான ஆபத்துகளை அதிகரிக்கிறது.

இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து முதன்மை மூத்த எழுத்தாளர் டாக்டர் எஸ்டர் வாமோஸ் கூறுகையில், “இங்கிலாந்தில் உள்ள பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில், இத்தகைய உணவுகளை எடுத்துக் கொள்வதால், எதிர்கால ஆரோக்கியத்தில், இவை முக்கியமான தாக்கங்களைக் கொண்டிருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com