காலடி விசையில் கால்பந்து மைதானத்துக்கு விளக்கொளி
நாம் அன்றாட வாழ்க்கையில் செலவுசெய்யும் உடல் சக்தியைப் பயன்படுத்தி பிரேசிலில் ஒரு கால்பந்தாட்ட மைதானத்துக்கு விளக்கு வெளிச்சம் தரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆதரவுடன் செய்யப்பட்டுள்ள அறிவியல் முயற்சி இது.
விளையாட்டு வீரர்களின் கால் தரையில் அழுந்தும்போது ஏற்படுகின்ற விசையைப் மின்சாரமாக மாற்றி மைதானத்தில் விளக்குகளை எரியவிட்டுள்ளனர்.
இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்ற விளக்கொளியில் ரியோ டி ஜெனீரோவின் ஏழ்மையான பகுதி ஒன்றில் இளம் வீரர்கள் கால்பந்து விளையாடியுள்ளனர்.
இந்த ஆட்டத்தை மூத்த கால்பந்தாட்ட நட்சத்திரம் பெலெ ஆரம்பித்துவைத்தார்.
ஏழை மாணவர்களுக்கு இந்த வசதி கிடைத்ததையிட்டு அவர் மனம் நெகிழ்ந்தார்.