கார்த்திகை பௌர்ணமியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? | Karthika Pournami thiruvannamalai deepam festival Arunachaleshwarar temple specials – News18 Tamil

Share

பெளர்ணமி நாள் என்றால் முழு நிலவு நாள். பெளர்ணமியில் கிட்டத்தட்ட 108 வகைகள் இருப்பதாகவும், அவற்றின் தன்மைகளுக்கேற்ப பல்வேறு விரத வழிபாட்டு முறைகள் உண்டு என்றும் சித்தர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதிலும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் அந்த மாதத்திற்கான பெளர்ணமி சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினத்தில் சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக காட்சி தருவது தான் திருக்கார்த்திகை தீபமாக திருவண்ணாமலை மீது மகா தீபமாக ஏற்றப்படுகிறது.

பெளர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தியை வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும். இந்த பெளர்ணமி ஒளிமயமான தினத்தில் அம்பிகைக்கும் பூஜைகள் செய்து வழிபாட்டால் தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். பெளர்ணமி நாளில் வீட்டிலும், கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் மிகச் சிறந்த பலன்களை பெற முடியும். அதுவும் கார்த்திகை மாதம் வரும் பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது.

சிவபெருமானே மலை ரூபமாக அமைந்த திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவது மிக கோலாகலமாகக் கொண்டாட்டத்தோடு வழிபடப்படுகிறது. நினைத்தாலே முக்தி அளிக்கக்கூடியவர் திருவண்ணாமலையார், அவர் ஜோதி வடிவில் காட்சி தரும் அற்புத நாளில் நாமும் நம் வீட்டில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட மனக்கவலைகள் நீங்கும். கண் கோளாறு தீரும். அனைத்து வகையில் நன்மை உண்டாகும்.

800 ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது கிபி 1240ல் இங்கு கிரிவலம் செல்ல ஜடாவர்ம விக்ரம பாண்டியன் பாதை அமைத்து பணி செய்தார். இந்த கிரிவலப்பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்கள் உள்ளன. அதோடு ரமண மகரிஷி, சேசாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் உள்ளிட்டோரின் சமாதிகள் அமைந்துள்ளன.

மேலும் படிக்க.. திருவண்ணாமலையில் மகா தீபம் எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்

விழாக்கள்

1. திருவண்ணாமலை கோயிலில் ஆண்டு தோறும் நான்கு பிரம்மோற்சவ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

2. ஆனி மாத பிரம்மோற்சவம்

3. மாசி மகம் தீர்த்தவாரி

4. கார்த்திகை தீபம்

5. பரணி தீபம்

6. மகாதீபம்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், ஹெலிகாப்டர் (உலங்குவானூர்தி) இறங்கும் தளம் உள்ளது. கோயிலுக்கு வரும் பெரிய பிரபலங்கள் இங்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கி கோயிலுக்கு செல்வது வழக்கம்.

திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக குறைந்த வாடகையில் தங்கும் வசதியுடன் கூடிய அறைகள் கோயில் நிர்வாகம் நிர்வகித்து வருகின்றது. திருக்கோயிலைச்சுற்றி தனியாருக்குச் சொந்தமான விடுதிகளும் உள்ளன.

மேலும் படிக்க… ஜோதிடம் என்பது உண்மையா? சத்குரு சொல்லும் விளக்கம்…

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com