தேவையான பொருட்கள்:
சீனி – 6 – 7 மேசைக்கரண்டி
கோன்பிளவர் – 1 1/2 மேசைக்கரண்டி
கட்டிப்பால் (கன்டென்ஸ்டு மில்க்)- 4 மேசைக்கரண்டி
பால் – 1 கப்
செய்முறை:
4 மேசைக்கரண்டி சீனியை ஒரு பாத்திரத்தில் போட்டு நெருப்பில் வைக்கவும். சீனி உருகி நிறம் மாறியதும் (பிரவுண்) எடுத்து ஒரு புடிங் கிண்ணத்தில் ஊற்றவும். காரமெல் கோன் ஃபிளவரில் 3 மேசைக்கரண்டி பாலை விட்டு கரைக்கவும். கட்டிப்பால், மீதிப்பால், மீதி சீனி சேர்த்து நன்கு காய்ச்சவும். பின்னர் இதனுள் கரைத்த கோன் ஃபிளவரை சேர்த்து கட்டி படாமல் கிளறவும். கலவை சிறிது தடித்ததும் அதனை காரமெல் ஊற்றிய கிண்ணத்தில் ஊற்றி ஆறவிடவும். சுவையான காரமெல் புடிங் தயார். தேவையானபோது எடுத்து பரிமாறும் தட்டில் கவிழ்த்துப் போட்டு பரிமாறவும். – கவிழ்த்துப் போடும் போது புடிங்கின் மேற்பகுதியில் காரமெல் வழிந்து பார்ப்பதற்கும் அழகான தோற்றத்தைத் தரும்.