ஊறுகாய் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, ஆலு பரோட்டா என அனைத்திற்கும் ஒத்துப்போகக் கூடிய ஒரு சிறந்த சைடிஷ் ஊறுகாய் என சொன்னால் மிகையாகாது. என்னதான் கடைகளில் பலவிதமான ஊறுகாய்களை வாங்கி நாம் சாப்பிட்டாலும் வீட்டில் ஃபிரெஷாக போடும் ஊறுகாய்க்கு சுவையே தனிதான். இதுவரைக்கும் மாங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய் என பல ஊறுகாய் செய்திருப்பீர்கள். வெஜிடபிள் ஊறுகாய் செய்திருக்கிறீர்களா.?
உங்கள் வீட்டில் சைடிஷ் செய்யுமளவுக்கு இல்லாமல் காய்கறிகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சம் மீதமிருந்தால் அப்போ அதை என்ன செய்வது என யோசிக்கிறீர்களா.? நீங்கள் செய்ய சரியான ரெசிபி இதுதான். இந்த ரெசிபியை செய்ய அடுப்பில் எதும் சமைக்கும் தேவையே இல்லை. அதனால் மீதமுள்ள காய்கறிகளை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- காலிஃப்ளவர் – 1
- பீன்ஸ் 250 கிராம்
- கேரட்-250 கிராம்
- பச்சைமிளகாய் – 4
- வினிகர்-அரைகப்
- சன்ஃப்ளவர் ஆயில் – அரை கப்
- கடுகு-1 பெரியகரண்டி
- உப்பு – தேவையான அளவு

செய்முறை :
கேரட், பீன்ஸை விரல் நீள துண்டுகளாக நறுக்கி அதை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
காலிஃப்ளவரை பூக்களாக எடுத்து அதை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். காய்கறிகளை முதல் நாள் இரவே கழுவி நறுக்கி ஒரு துணியில் மேலே போட்டு இரவு முழுவதும் உலரவிடவும்
காலையில் கடுகை பொடி செய்து எடுத்து கொள்ளுங்கள்.
ஒரு காய்ந்த ஜாடியில் காய்கறிகளை போட்டு எண்ணெய், வினிகர், கடுகு பொடி, உப்பு எல்லாம் போட்டு நன்கு குலுக்கி வைத்து அடுத்த நாள் சாப்பிடவும்.
இதில் தண்ணீர் படாமல் இருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.