மும்முறை தாண்டுதல் போட்டியில் களமிறங்கிய இந்திய வீரர்கள் இரண்டு பேர் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளனர். ஒரே போட்டியில் எல்தோஸ் பால் தங்கமும், அப்துல்லா அபூபக்கர் வெள்ளியும் வென்று அசதியுள்ளனர். 25 வயதான எல்தோஸ் பால் 17.03 மீட்டர் உயரம் குதித்து காமன்வெல்த் விளையாட்டில் மும்முறை தாண்டுதலில் தங்கம் வெல்லும் முதல் இந்தியராகச் சாதனை படைத்துள்ளார். அதே போட்டியில் அப்துல்லா அபூபக்கர் 17.02 மீட்டர் உயரம் குதித்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். மேலும் பிரவீன் சித்திரவேல் 0.03 மீட்டர் அளவில் சற்றே வெண்கல பதக்கத்தை நழுவினார்.
Also Read : காமன்வெல்த் விளையாட்டு: மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கம்
மேலும் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிற பல போட்டிகளில் இந்தியா தங்கம் வென்றதுடன் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. 48 கிலோ எடைப் பிரிவில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் நீத்து கங்காஸ் தங்கம் , 51 கிலோ எடைப் பிரிவில் ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் அமித் பங்கால் தங்கம் என்று இந்தியாவிற்குத் தங்கப் பதக்கங்கள் குவித்து வருகின்றது.
தற்போதைய பட்டியல் வரை இந்தியா 16 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் என்று மொத்தம் 45 பதக்கங்களுடன் 5வது இடத்தில் இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.