காண்டம்…உங்களுக்கு ஏற்ற அளவைப் பயன்படுத்துங்க..! காமத்துக்கு மரியாதை | S3 E 48 | Condom… Do’s & Don’ts

Share

காண்டம் பற்றிய விழிப்புணர்வு இன்றைக்குக் கிட்டத்தட்ட அனைவரிடமும் இருக்கிறது. ஆனால் யார், எதைப் பயன்படுத்த வேண்டும்; காண்டம் அலர்ஜி ஏற்பட்டால் என்ன செய்வது என்பன போன்ற முழுமையான விழிப்புணர்வு பலரிடமும் இல்லை. இதுகுறித்தே, இந்த வார காமத்துக்கு மரியாதையில் பாலியல் மருத்துவர் காமராஜ் விரிவாகப் பேசியிருக்கிறார்.

“காண்டம் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை சொல்வதற்கு முன்னால், அதுபற்றி சொல்லப்படுகிற சுவாரஸ்யமான ஒரு தகவலை சொல்ல விரும்புகிறேன். இங்கிலாந்தை ஆட்சி செய்து வந்த இரண்டாம் சார்லஸ், உறவில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஆனால், அந்தக் காலத்தில் சிஃபிலிஸ்  (SYPHILIS) போன்ற பால்வினை நோய்கள் அதிகம் இருந்ததால், அடிக்கடி உறவு கொள்ள பயந்தார். மன்னருடைய மருத்துவர் ஆட்டுக்குடலின் நுனியைத் தைத்து ஆணுறை போல உருவாக்கி அதை மன்னருக்கு வழங்கினார். இது பால்வினை நோய்கள் வராமல் தடுக்கும் என்பதையும் கண்டறிந்தார். மன்னருடைய மருத்துவரின் பெயராலேயே, “காண்டம்’ என்று அது அழைக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப்போரின்போது உலகின் சில இடங்களில் மட்டும் இருந்து வந்த சிஃபிலிஸ் என்ற நோய், உலகம் முழுக்க பெருமளவில் பரவியது. அந்த நேரத்தில் அதைத் தடுக்க காண்டம் அதிகளவில் பயன்பட்டது. இதன்பிறகு காண்டம் தயாரிக்கும் நிறுவனங்கள் அதை பல விதங்களில் தயாரிக்க ஆரம்பித்தன. அந்த வகையில் தற்போது லேட்டேக்ஸ், பாலியூரித்தின், ரப்பர், ஃப்ளேவர்டு, ஈட்டபிள்,  ஹனிமூன் காண்டம், முதலிரவு காண்டம், வைப்ரேட்டிங் காண்டம் என்று பலவிதங்களில் வருகின்றன.

காண்டம் பயன்படுத்துவதற்கு முன்னால் நீங்கள் கவனிக்க வேண்டியவை என்னென்னவென்றால்…

* காண்டம் சேதாரமாகி இருக்கக்கூடாது.

* அதன் காலாவதி தேதி முடிந்திருக்கக்கூடாது.

* காண்டமில் ஸ்மால், மீடியம், பிக் சைஸ் என மூன்று அளவுகள் இருக்கின்றன. அதில், உங்களுக்கு என்ன சைஸ் பொருந்துமோ அதைத்தான் பயன்படுத்த வேண்டும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com