காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப பலி

Share

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா வாழவயல் பகுதியில் தம்பி மற்றும் அவரது மனைவியுடன் வசித்தவர் பாப்பாத்தி (70). கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை யானை பாப்பாத்தியின் வீட்டை தாக்கி உடைத்தது. பின்னர் வீட்டின் முன்பகுதியில் படுத்திருந்த பாப்பாத்தியை துதிக்கையால் இழுத்து வெளியே வீசிய யானை, அவரை காலால் மிதித்து கொன்றது.

யானையை கண்டதும் பாப்பாத்தியின் தம்பி ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி தப்பி ஓடி அருகில் உள்ள வீட்டில் தஞ்சம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியதால் இருவரும் லேசான காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர், யானையை சத்தமிட்டு  விரட்டினர்.  தகவலறிந்து வனத்துறையினரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com