காடை கிரேவி செஞ்சிருக்கீங்களா..? டிரை பண்ணி பாருங்க..!

Share

வழக்கமாக மட்டன், சிக்கன், மீன் என எப்போதும் ஒரே மாதிரியே சாப்பிடும் நீங்கள் இந்த காடை கிரேவியை ட்ரை பண்ணி பாருங்கள். அப்புறம் வாரம் வாரம் வாங்கி சாப்பிடுவீர்கள். சுவை அபாரமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

காடை -2

பெரிய வெங்காயம் -1

தக்காளி -1

மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்

மிளகுத்தூள்-1ஸ்பூன்

மல்லித்தூள்-1ஸ்பூன்

மஞ்சள்தூள்-1/2ஸ்பூன்

கரம் மசாலா -1/2 ஸ்பூன்

உப்பு -தேவைக்கு

கருவேப்பிலை – 1 கொத்து

அரைக்க: 

சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி தழையை தனியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு தேங்காய் -3 துண்டுகள், சோம்பு-1/2ஸ்பூன் சேர்த்து தனியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தாளிக்க:

எண்ணெய், பட்டை ,கிராம்பு, பிரிஞ்சி இலை-தலா1

இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன்

செய்முறை:

1. அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து தனியே எடுத்து வைக்கவும் .

2. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு , தாளிக்க கொடுத்த வற்றை சேர்த்து தாளிக்கவும் .

3. பின் இதனுடன் வெங்காயம் ,சேர்த்து பொன்னிறமானதும்  தக்காளி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் .

4. பின் இதனுடன் மிளகாய்தூள், மிளகுதூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கர மசாலா தூள் என அனைத்தையும் சேர்த்து, அதனுடன் காடை துண்டுகள் , உப்பு சேர்த்து வதக்கவும் .

5. தேவையான அளவு நீர் விட்டு, மூடி வேக விடவும் .

6. குக்கர் என்றால் ஒரு விசில் போதுமானது . பாத்திரம் என்றால் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை சரி பார்த்து இறக்க வேண்டும்.  வெந்ததும் மல்லித்தழை தூவி இறக்கினால் காடை கிரேவி ரெடி. . இதனை சூடான சாதம் அல்லது சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com