`காசநோயை வெல்ல தனிமனித சுகாதாரமே முதல் தீர்வு' – அறிகுறிகள், தீர்வுகளை விவரிக்கும் மருத்துவர்!

Share

வரும் 2025-ம் ஆண்டுக்குள், இந்தியாவில் காசநோயை ஒழிப்பதே தேசிய அளவிலான நம் குறிக்கோளாக இருக்கிறது. அதன்படி, இந்த ஆண்டு மத்திய சுகாதாரத் துறை, ‘’Yes! We can end TB!’’ எனும் கருப்பொருளைக் கையில் எடுத்துள்ளது. உலக காசநோய் அறிக்கை (2022) யின் புள்ளி விவரங்களின்படி, உலகில் உள்ள காசநோயாளிகளில் 28% பேர் இந்தியாவில் இருப்பது தெரிகிறது.

Dr. N. Parthiban, M.B.B.S., M.D , General Medicine, Trichy – Cantonment.

காசநோய் பரவுவது எப்படி?

எளிதில் பரவக்கூடியதும், அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதுமான காசநோய் குறித்த விழிப்புணர்வு, பொதுமக்கள் அனைவருக்கும் அவசியம். காசநோய் பரவக் காரணம் என்ன, அதன் அறிகுறிகள் என்னென்ன, தீர்வுகள் மற்றும் காசநோய் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, திருச்சி, காவேரி மருத்துவமனையின் பொது மருத்துவர் பார்த்திபனிடம் பேசினோம்…

காசநோய், மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியா மூலம் பரவுகிறது. மக்கள்தொகை அதிகமுள்ள வளரும் நாடுகளில் இந்நோயின் பாதிப்பு அதிகம் உள்ளது. காசநோய் பாதிப்புடைய ஒருவருக்கு இருமல், தும்மல் ஏற்படும்போது அவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பாக்டீரியா பரவும் வாய்ப்புகள் அதிகம்.

காசநோய் எளிதாகப் பரவ வாய்ப்புள்ளவர்கள் அல்லது காசநோய் தொற்று எளிதாக ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளவர்கள்:

* வயதானவர்கள்

* குழந்தைகள்

* மருத்துவத்துறைப் பணியாளர்கள், மாணவர்கள்

* ஹெச்.ஐ. வி (HIV) பாதிப்புடையவர்கள்

* டயாலிசிஸ் (Dialysis) நிரந்தரமாக மேற்கொள்ளும் நோயாளிகள்

* உறுப்பு தானம் பெற்ற நோயாளிகள் (Organ transplant recipients)

* நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் (Immune suppressive drugs)

* போதை மருந்துகள் உட்கொள்பவர்கள் (Illicit drugs)

* வீடற்றவர்கள் (homeless people)

* கைதிகள் (prisoners)

* எடை குறைவாக உள்ளவர்கள் (underweight)

* நீரிழிவு நோய் உள்ளவர்கள் (diabeter)

* சிலிகோசிஸ் (Silicosis), நியூமோகோனியோஸிஸ் ( Pneumoniosis) உள்ளவர்கள்.

காசநோயாளி – கோப்பு படம்

இருவகை காசநோய் பாதிப்புகள்

காசநோய் நுரையீரலில் ஏற்படுத்தும் பாதிப்பை பல்மோனரி டியூபர்குளோசிஸ் (Pulmonary tuberculosis) என்று குறிப்பிடுகிறோம். மற்ற உறுப்புகளில் உண்டாக்கும் பாதிப்பை எக்ஸ்ட்ரா பல்மோனரி டியூபர் குளோசிஸ் (extra pulmonary tuberculosis) என்று குறிப்பிடுகிறோம்.

இது மூளை (TB Meningitis), spinal cord (TB spine) முதுகுத்தண்டு, நெறிக்கட்டிகள் (TB Lymphodenitis), குடல் (Intestinal tuberculosis), சருமம் (skin TB) என உடலில் பெரும்பாலான உறுப்புகளை பாதிக்கலாம்.

அறிகுறிகள் என்னென்ன:

* காய்ச்சல்

* நாள்பட்ட இருமல் (இரண்டு வாரங்களுக்கு மேல்)

* சளியில் ரத்தம்

* பசியின்மை, உடல் எடை குறைதல்

* இரவு நேரங்களில் அதிகம் வியர்த்தல்

இத்தகைய அறிகுறி உள்ளவர்கள், உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகி, தகுந்த ஆலோசனை பெற வேண்டும். சளி பரிசோதனை ( Sputum), எக்ஸ்ரே (chest X-ray) முதலான பரிசோதனைகள் மூலம் காசநோய் உறுதி செய்யப்பட்டால், காலம் தாழ்த்தாமல் உடனடியாக அதற்கான சிகிச்சையைத் தொடங்க வேண்டும். அவ்வாறு சிகிச்சை பெறவில்லையெனில் தேவையற்ற நெடுங்கால உடல் பாதிப்புகள் (complications) உண்டாக நேரிடும்.

Tuberculosis

Latent TB:

TB பாக்டீரியாவின் தொற்று (Infected person) ஏற்பட்ட அனைவரும், காசநோயினால் (Active TB) பாதிக்கப்படுவதில்லை. இதற்கு முக்கிய காரணம் நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் (immune system. இத்தகைய பாதிப்பை (inactive TB), லேடன்ட் டிபி (latent TB) என்று குறிப்பிடுகிறோம்.

இதுவே பின்னாளில் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி (immunity) குறையும்போது காசநோய் அறிகுறிகளாக வெளிப்பட வாய்ப்புள்ளது (Active disease). நம்முடைய அரசு, இத்தகைய பாதிப்புகளைக் கட்டுப்படுத்த (TB preventive treatment) காசநோய் தடுப்பு சிகிச்சையை வழங்குகிறது.

பொதுவான பாதிப்புகள்

பெரும்பாலானவர்களுக்கு தொடக்கத்தில் வாந்தி, குமட்டல், வயிற்று உபாதைகள் போன்ற சாதாரண பிரச்னைகள் உண்டாகலாம். அவற்றை தகுந்த மருந்துகள் மூலம் குணப்படுத்திவிடலாம். வெகு சிலருக்கு கல்லீரல் பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்றவை உண்டாகும். அவற்றையும் நாம் மருத்துவரை அணுகி சரி செய்து விடலாம். பொதுவாக இத்தகைய பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் வைட்டமின் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

காசநோய்

காசநோய் பரவலைத் தடுக்கும் முறைகள்

* தனிமனித சுகாதாரம் (personal hygiene)

* தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் (BCG vaccination)

* பெரும்பாலும் கூட்ட நெரிசலைத் தவிர்த்தல் (avoid overcrowded areas)

* இருமல், தும்மல் ஏற்படும் போது கைகள் அல்லது கைகுட்டையைப் பயன்படுத்தி வாய் மற்றும் மூக்குப் பகுதிகளை மூடிக்கொள்ளுதல் (cough etiquette)

* சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல்(social distance)

* பொது இடங்களில் சளி மற்றும் எச்சில் துப்புவதைத் தவிர்த்தல் (avoid splitting in public places)

* நோய் பாதிப்பு உள்ளவர்கள் பொதுஇடங்களுக்குச் செல்லும்போது கட்டாயம் மாஸ்க் (mask) அணிய வேண்டும்.

இத்தகைய அடிப்படை சுகாதார நடவடிக்கைகளால் காசநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com