காங்கிரஸ் கட்சி தீவிர சமூக நீதிப் பாதையில் பயணிப்பது ஏன்? – ஒரு நூற்றாண்டுப் பயணத்தின் கதை

Share

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
காங்கிரஸ் கட்சி

பட மூலாதாரம், Getty Images

சமீபத்தில் சட்டீஸ்கரின் ராய்ப்பூரில் நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சியின் 85வது சிந்தனை அமர்வில் பல முற்போக்கான சமூக நீதித் திட்டங்களை காங்கிரஸ் கட்சி முன்வைத்திருக்கிறது.

கட்சியின் முந்தைய தடுமாற்றங்களில் இருந்து விலகி, புதிய பாதையைத் தேர்வு செய்கிறது காங்கிரஸ். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? இது பலனளிக்குமா?

காங்கிரஸ் கட்சியின் 85வது சிந்தனை அமர்வு சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் கடந்த வாரம் நடந்து முடிந்தது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள், 2024ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது என்றாலும், மாநாட்டின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்தான் அகில இந்திய ரீதியில் பலரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகியோரின் கல்வியையும் கண்ணியத்தையும் உறுதிப்படுத்த ‘ரோஹித் வெமுலா சட்டம்’ என்ற பெயரில் சட்டத்தை உருவாக்குவது, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதற்கென தனியான அமைச்சகம், தனியார் நடத்தும் தொழில் நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர், பழங்குடியினர் ஆகியோருக்கும் சம அளவில் வேலைவாய்ப்புகளை வழங்குவது, நீதித்துறையின் உச்ச அமைப்புகளில் இட ஒதுக்கீடு போன்ற சமூக நீதிக் கொள்கைகளை தீர்மானமாக காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியிருக்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com