விழுப்புரத்தில் ஃபேமஸாகும் காக்ரா சாண்ட்விச் எப்படி தயாரிக்கின்றனர் என்பது பற்றி இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.
பொதுமக்களிடமும் நல்ல பிடித்தமான உணவாக sandwich விளங்கி வருகிறது. Sandwich ல பல வித்தியாசமான ஸ்டஃபிங் வைத்து பொதுமக்களுக்கு கொடுக்கிறார்கள். அந்த வகையில் விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் உள்ள விழுப்புரம் food court இல் உள்ள ஃபில் அண்ட் பைட் ( Fill&Bite) கடையில் வித்தியாசமான sandwichஐ தயார் செய்கிறார்கள். சாண்ட்விச் செய்வதற்கு பிரட்டுக்கு பதிலாக காக்ரா சாண்ட்விச் (கோதுமை ரொட்டி) பொதுமக்களுக்கு அளித்து வருகின்றனர்.
இந்த வித்தியாசமான சாண்ட்விச் செய்ய முதல்ல ஒரு காக்ரா எடுத்துட்டு அதுல மயோனைஸ், கிரீன் சட்னி தடவிய பிறகு வெட்டிய வெங்காயம் வெள்ளரிக்காய், தக்காளி வச்சிட்டு அதுக்கப்புறம் தேவையான அளவு சாட் மசாலா தூவி இன்னொரு காக்ரா எடுத்து அதுலயும் கொஞ்சம் மயோனைஸ் கிரீன் சட்னி தடவி அது மேல வைக்கணும். அதுக்கப்புறம் தேவையான அளவு ஓமப்பொடி மிக்சரை தூவினால், சுவையான காக்ரா சாண்ட்விச் தயார்.
காக்ரா சாண்ட்விச்
இதன் விலை 45 ரூபாய் ஆகும். இந்த காக்ரா சாண்ட்விச் சாப்பிடுவதற்கான தனி கூட்டமே வருகிறது. மேலும் கடைக்கு வருகை புரிந்த வாடிக்கையாளர்களும் இந்த சாண்ட்விச்சை சாப்பிட்டு மிகவும் டேஸ்டாக இருக்கிறது எனவும் கூறினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.