அரங்கம் கமகமக்க… நாவூறும் சுவையிலான அரிசி நொய் உப்புமா, தயிர் சட்னி, பழைய அமுது, திருக்கை மீன் குழம்பு, சுறா புட்டு, முளைப் பயறு சோளம் சுண்டல், ஆடு தொடா இலை டீ, மோர்க்களி, காலி ஃபிளவர் பாயா, மிளகு மஞ்சள் பால், பாசிப் பருப்பு லட்டு, முசுமுசுக்கை இலை அடை, மிளகு அடை, விறால் மீன் குழம்பு, ராகி சந்தைக் களி, திணையில் செய்த கட்லட், குதிரைவாலி சாக்லேட் பொங்கல், மட்டன் நல்லி, மட்டன் குழம்பு, காடை ஃபிரை, வெத்தலை பாயசம், அடை அவியல், கோதுமை மாவு கொழுக்கட்டை, பச்சரிசி மற்றும் துவரம் பருப்பில் செய்யக்கூடிய பெளா பாத், கருப்பு உளுந்து லட்டு, தூய மல்லி சாம்பார் சாதம், கொள்ளு குழம்பு, நாட்டுக் கோழி குழம்பு, கருப்பு கவுனி அரிசியில் மட்டன் கைமா கஞ்சி, சங்கரா மீன் குழம்பு, கொள்ளு துவையல், சம்பா ரவை பொங்கல், பனீர் பிரியாணி, மட்டன் கைமா, தேங்காய் போலி, டிராமிசு சிக்கன், கொங்கு பிரியாணி, தேங்காய் பால் சாதம், ஃபிஷ் கோலா உருண்டை, ஃபிஷ் கறி மசாலா, ஆவாரம்பூ நெய்பருப்பு, வாழைப்பூ கோலா உருண்டை, சங்கு பூ சாதம், தேங்காய் பால் ரசம், வெஜ் ஈரல் குழம்பு, வாழைத் தண்டு உருளைக்கிழங்கு பச்சடி, கறிவேப்பிலை சூப், ஜப்பான் வெஜிடபிள் பம்கின், இறால் ஊறுகாய், ஹனி கேக் ஆகியவை முக்கிய இடம் பிடித்தன.
கொசப்பேட்டையைச் சேர்ந்த யுத்திகாஸ்ரீ என்ற 7 வயது சிறுமியும், ஊசூரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் முகமது ரியானும் போட்டியில் கலந்துகொண்டு தங்களின் ரெசிப்பியைக் காட்சிப்படுத்திய முறை வாவ் சொல்ல வைத்தது. இதையடுத்து, செஃப் தீனா உணவை ருசிபார்த்து மதிப்பெண் வழங்கினார். கடுமையான போட்டி நிலவிய முதல் சுற்றில் இருந்து 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டாவது சுற்று `லைவ் குக்கிங்’ போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள், சென்னையில் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்பர்.