கவாஸ்கர், சச்சின், சேவாக் வரிசையில் இணைந்த ஷுப்மன் கில்

Share

மழையால் பாதிக்கப்பட்ட 3வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகளை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 3-0 என்று கைப்பற்றிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 98 நாட் அவுட் என்று முடிந்தார், பாவம் சதம் எடுக்க வாய்ப்பில்லாமல் மழை குறுக்கிட்டது. ஆனால் அவர் கவாஸ்கர், சச்சின், சேவாக் போன்ற ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

ஷுப்மன் கில் ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் 90களில் சதமெடுக்க முடியாமல் தேங்கிய வகையில் ஒருநாள் போட்டிகளில் சேவாக், கவாஸ்கர், சச்சின் வரிசையில் இணைந்தார் ஷுப்மன் கில்.

90 ரன்களில்களில் சதமெடுக்க முடியாமல் தேங்கிய இந்திய வீரர்கள் பட்டியல் இதோ:

93 நாட் அவுட் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1985 விக்டோரியா கோப்பையின் போது.

92 நாட் அவுட் – சுனில் கவாஸ்கர்.

96 நாட் அவுட் – சச்சின் டெண்டுல்கர்

99 நாட் அவுட்- விரேந்திர சேவாக் – இது இலங்கை பவுலர் வேண்டுமென்றே அவர் சதம் எடுக்கக் கூடாது என்று வைடு நோ-பால் வீசியதால் ஏற்பட்ட துரதிர்ஷ்டம், பந்து சிக்சருக்குப் பறந்தது, ஆனால் நோ-பால் என்பதால் அப்போதே வெற்றியாகி விட்டதால் சிக்சர் சேவாக் கணக்கில் சேராமல் 99-ல் நின்றார். அந்த பவுலர் சுரஜ் ரந்திவ் என்று நினைவு.

ஷிகர் தவான் – 97 நாட் அவுட்.

ஷுப்மன் கில் – 98 நாட் அவுட்.

தன் இன்னிங்ஸ் பற்றி கூறிய ஷுப்மன் கில், “சதமெடுக்கலாம் என்றுதான் ஆடினேன், ஆனால் மழை நம் கையில் இல்லாத விவகாரம். முதல் 2 போட்டிகளில் அவுட் ஆன விதம் ஏமாற்றமளித்தது. பந்தை பார்த்துத்தான் ஆடுகிறேன், மற்றபடி உள்ளுணர்வுதான்” என்றார்.

மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜூலை 29ம் தேதி தொடங்கும் டி20 தொடருக்கு ஷுப்மன் கில் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com