கவர்னரின் செயலை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் 19ல் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

Share

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், அரசியலமைப்பை பாதுகாப்போம்-கையோடு கைகோர்ப்போம் பரப்புரை இயக்கத்தின் மேலிட பொறுப்பாளர் கொடிக்குனில் சுரேஷ், மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, தமிழ்நாடு எஸ்சி பிரிவின் தலைவர் ரஞ்சன் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், பிரின்ஸ், அசோகன், பழனி நாடார், ஊட்டி கணேஷ், பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, சென்னை மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் எம்.எஸ். திரவியம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: கவர்னரின் செயல் தமிழ்நாடு வரலாற்றில் பிழையை ஏற்படுத்தியுள்ளது. இதை பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே வரும் 19ம்தேதி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும், கவர்னரின் செயலை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com