“கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயங்கள்” – பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

Share

  • நடராஜன் சுந்தர்
  • பிபிசி தமிழுக்காக

சித்தரிப்பு படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சித்தரிப்பு படம்

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த தங்களுடைய மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்ரோர் புகார் அளித்திருந்த நிலையில், அவரது உடலில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

அந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து கடந்த 4 நாட்களாக அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் போராடி வந்தனர். அந்த மாணவி மரணமடைந்த விவகாரத்தில் நடந்தது என்ன?

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், செல்வி தம்பதியின் மகள் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம்‌ வகுப்பு படித்து வந்துள்ளார்.

கடந்த 13ஆம் தேதி காலையில் இவர்களின் மகள் இறந்து விட்டதாக பெற்றோருக்கு தகவல் வந்தது. நேரில் பார்த்த மாணவியின் தாயாரிடம், அவரது மகள் பள்ளி மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com