சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் 4 பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சம்பந்தபட்ட பேராசிரியர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் கல்லூரி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிது. தமிழக அரசு விரைந்து விசாரணை நடத்தி, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் பேராசிரியர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்
Share