கலர் கலராக காய்கறிகள்.. அடடே நன்மைகள்.. வானவில் டயட் பற்றி தெரியுமா?

Share

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான டயட் பிரபலமாக இருக்கும். இப்போதைய டிரெண்ட் என்ன தெரியுமா? வானவில் டயட் (ரெயின்போ டயட்). உலகம் முழுவதும் இந்த டயட் பிரபலமாக இருந்தாலும், இன்னும் பலருக்கு இந்த டயட்டின் நன்மைகள் குறித்து தெரியவில்லை. அவர்களுக்கு தான் இந்த விளக்கம்…

வானவில் நிற டயட் என்பதும் ஒன்றும் புரியாத வார்த்தை அல்ல. இதனால் கிடைக்கும் பலன்களை உலகம் முழுவதும் உள்ள மக்கள் தெரிந்து கொண்டு, இதை பின்பற்றுகிறார்கள். தினமும் பல்வேறு வண்ணங்களில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதுதான் வானவில் டயட். நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் குறிப்பிட்ட மைக்ரோ, மேக்ரோ ஊட்டச்சத்துகள் தேவை. அதற்காக விட்டமின் மற்றும் ஊட்டச்சத்துகள் அடங்கிய டயட்டை நாம் பின்பற்ற வேண்டும். கீரைகள், கேரட், ஸ்டராபெரி போன்ற வண்ணமயமான உணவுகளால் நமது உடல் ஆரோக்கியம் வலுவடையவே செய்யும். வானவில் டயட் என்பதையே இப்போதுதான் கேள்விப்படுகிறீர்களா. இதோ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்…

சரி, இந்த வானவில் டயட்டை எப்படி பின்பற்றுவது?

வீட்டிலேயே எப்படி வானவில் டயட்டை தயார் செய்வது, இதில் எந்த உணவெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம் போன்ற விவரங்களை செஃப் ராஜி நமக்கு வழங்குகிறார்.

  • சிவப்பு: சிவப்பு நிற உணவுகள் நமது இதயம் மற்றும் சிறுநீரகத்திற்கு நல்லது. ஆகவே தக்காளி, சிவப்பு மிளகாய் (வற்றல்), ஸ்ட்ராபெரி, தர்பூசணி ஆகியவற்றை உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • ஆரஞ்ச்: ஆரஞ்ச் நிற உணவுகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. மேலும், நமது உடலில் ஏற்படும் காயம், வீக்கம் போன்றவற்றை குறைக்கவும் இது உதவுகிறது. ஆகையால் கேரட், ஆரஞ்சு பழம், சர்க்கரைவள்ளி கிழங்கு, வாதுமை பழம் (ஆப்ரிகாட்) ஆகியவற்றை உங்கள் டயட்டில் சேர்ட்த்துக் கொள்ளுங்கள்.
  • மஞ்சள்: மஞ்சள் வண்ண உணவுகள் நமது பார்வையை மேம்படுத்தவும் பல வகையான புற்றுநோய்களிலிருந்து நம்மை காக்கவும் பயன்படுகிறது. பைனாப்பிள், வாழைப்பழம், மஞ்சள் நிற குடை மிளகாய், எலுமிச்சை போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • பச்சை: பச்சை நிற உணவுகள் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. பச்சை நிற காய்கறிகள், பழங்களை உணவில் சேர்க்கும் போது வயிற்றில் இருக்கும் குழந்தை நலமாக இருப்பதோடு மகப்பேறு சமயத்தில் நரம்புத்தண்டு பாதிக்காமல் தடுக்கிறது. ஆகவே கீரைகள், ப்ரோக்கோலி, கிவி போன்ற பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • நீலம் மற்றும் ஊதா: இந்த இரண்டு வண்ணங்களில் இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களில் ஆன்டிஆக்சிடெண்டுகள் நிரம்பியுள்ளன. ரத்த அழுத்தத்தை முறைபடுத்தவும் இதய நோய் வராமல் தடுக்கவும் இவை பயன்படுகிறது. ப்ளூபெரி, கருப்பு திராட்சை, ஊதா நிற முட்டைகோஸ் மற்றும் கத்தரிக்காயை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • வெள்ளை: உங்களின் எலும்பு மற்றும் பற்களின் நலத்திற்கு வெள்ளை நிற உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. காலிஃபிளவர், வெங்காயம், பூண்டு மற்றும் காளான் போன்றவற்றை நன்றாக சாப்பிடுங்கள்.

Also Read | ஒரு வாரத்தில் 5 முதல் 8 கிலோ வரை குறைக்க உதவும் GM டயட்..!

வானவில் டயட்டின் நன்மைகள் :

  • வண்ணமயமான காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. அதே சமயத்தில் இவை குறைவான கலோரிகளையே கொண்டுள்ளது. ஆரோக்கியமான உடல் எடை வேண்டுமா? தாராளமாக இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த உணவுகளை சாப்பிடும் போது நமக்கு வீணாக பசி எடுப்பதில்லை.
  • இந்த வண்ணமயமான டயட் உங்கள் உடலுக்கு தேவையான பைடோகெமிக்கல்ஸை கொடுத்து உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதோடு வேறு உடல்நல பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • ஏனென்றால் வண்ணமயமான பழங்களும் காய்கறிகளும் குறைவான கலோரிகளை கொண்டவை. இவை உங்களின் உடலில் உள்ள சக்தியின் அளவை அப்படியே வைத்துக் கொள்கிறது. மேலும், வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகளில் நிறைய நார்ச்சத்து உள்ளது. இது உங்களின் குடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
  • இதில் விட்டமினும் ஆன்டிஆக்சிடெண்டுகளும் இருப்பதால் உங்கள் சருமம் மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. நமது உடல் நன்றாக இயங்க சில ஊட்டச்சத்துகள் அவசியமானவை. பல வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களில் நமது உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளன.
  • ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லலாம். வானவில் டயட்டை பின்பற்றினால் உங்கள் உடலுக்கு பல வழிகளில் நன்மை கிடைக்கும். மற்றொரு முக்கியமான விஷயம். நீங்கள் ஏதாவது மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தால், இந்த வானவில் டயட்டை பின்பற்றுவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com