ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படாத 63,681 குழந்தைகளுடன், 12,799 ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஒப்பீடு செய்தனர். லித்தியம் அளவுகளைக் காலாண்டுகளாக அல்லது நான்கு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு கால் பகுதி மதிப்புகளைப் பிரித்து ஆய்வு செய்தனர்.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்…
*வீட்டுக்குழாய் நீரில் அதிக அளவு லித்தியம் இருந்து, அதை கர்ப்பிணிகள் குடித்தால், இது நரம்பியல் வளர்ச்சியில் ஈடுபடும் ஒரு முக்கிய மூலக்கூறு பாதையை பாதிப்பதோடு, மன வளர்ச்சி குறைபாட்டையும் (ஆட்டிசம்) ஏற்படுத்தவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
*எதிர்காலத்தில் லித்தியம் பேட்டரிகளின் பயன்பாடு அதிகரித்து நிலத்தில் வீசப்படும்போது, இது நிலத்தடி நீரை மாசுபடுத்தி லித்தியம் அளவை நிலத்தடி நீரில் அதிகரிக்க வாய்ப்புண்டு.
*மனநல பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க லித்தியம் கொடுக்கப்பட்டாலும், கர்ப்பிணிகள் லித்தியம் எடுத்துக் கொள்வது கருச்சிதைவு, இதயக்கோளாறுகள் மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்குக் குறைபாடுகளை ஏற்படுத்துவதற்கான ஆபத்துடன் தொடர்புடையது என்ற வாதம் உள்ளது.
`மனித மூளையின் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய குடிநீரில் உள்ள எந்த அசுத்தங்களும் தீவிர ஆய்வுக்குத் தகுதியானவை’ என இந்த ஆய்வில் ஈடுபட்ட நரம்பியல் பேராசிரியர் பீட் ரிட்ஸ் கூறியுள்ளார்.