கர்நாடக பாஜக எம்.எல்.ஏ பொது இடத்தில் பெண்ணிடம் தவறாக நடந்த விவகாரம்: வலுக்கும் எதிர்ப்பு

Share

  • இம்ரான் குரேஷி
  • பிபிசி இந்தி சேவைக்காக

பாஜக கொடி

பட மூலாதாரம், Getty Images

கர்நாடக முன்னாள் அமைச்சரும் கர்நாடக சட்டமன்ற உறுப்பினருமான அரவிந்த் லிம்பவல்லி, தனது தொகுதியில் வசிக்கும் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதும் தொலைக்காட்சியில் அதுகுறித்துப் பேசியதும் மக்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுகுறித்து உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் பேசியபோது, “நான் அவரை பாலியல் வன்கொடுமை செய்தேனா, என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்?” என்று அவர் தனது செயலை நியாயப்படுத்தியது சமூக ஊடகங்களில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவருடைய தொகுதிக்கு உட்பட்ட வர்தூர் பகுதியில் வியாழக்கிழமை நடந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்கலில் வைரலாகப் பரவியது. அங்கு ஒரு பெண் அவரிடம், தனது வீடு மழைநீர் வடிகால் பகுதியை ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று கூறி அதற்கான ஆவணத்தைக் காட்டினார். அந்தப் பெண்ணிடம் அவர் நடந்துகொண்ட விதம் தான் இந்தச் சீற்றத்திற்குக் காரணம்.

கடும் மழை, வெள்ளம் ஆகியவை ஏற்பட்டதால், பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், அடுக்குமாடி கட்டடங்கள் நிறைந்த பெங்களூரு மாநகராட்சியின் பிரஹுத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP) என்ற அரசு அமைப்பு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com