கர்நாடக தேர்தல் முடிவுகள்: எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்க்கும் அச்சாணி ஆகுமா காங்கிரஸ்?

Share

காங்கிரஸ் அச்சாணியாக மாறுமா?

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ‘இது வெறுப்புணர்வுக்கு எதிரான அன்பின் வெற்றி’ என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடக தேர்தல் வெற்றிக்குப் பிறகு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். தலைவர்கள் ஊடக கேமராக்களுக்கு முன்னால் சிரித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வெற்றியின் உற்சாகத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் அலுவலகத்தில் பார்க்க முடிகிறது.

கர்நாடகாவில் அமோக வெற்றியை நோக்கி நகர்ந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, 2024ல் ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக வருவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

கர்நாடகா வெற்றியின் பெருமை ராகுல் காந்தியை சேரும் என்று காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளங்களில் கூறியுள்ளது. காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிட்டனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com