அமெரிக்காவின் பிரபலமான மூன்று பிராண்டுகளில் இருந்து சுமார் 25 ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை வாங்கினர். வாங்கிய பாட்டில் தண்ணீரை ஆய்வு செய்கையில், ஒவ்வொரு லிட்டரிலும் 1,10,000 முதல் 3,70,000 சிறிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதைக் கண்டறிந்தனர், அவற்றில் 90% நானோ பிளாஸ்டிக்குகள்.
`ஒரு லிட்டர் (33 அவுன்ஸ்) பாட்டில் தண்ணீரில் சராசரியாக 2,40,000 பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன’ என்று ஆய்வில் தெரிந்தது. எந்தெந்த பிராண்டுகளை ஆய்வு செய்தனர் என்பதைத் தெரிவிக்க ஆராய்ச்சியாளர்கள் மறுத்துவிட்டனர்.
இதற்கு முன்பும் இது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், அப்போது 1 முதல் 5,000 மைக்ரோமீட்டர்களுக்கு இடைப்பட்ட பிளாஸ்டிக் துகள்களை மட்டுமே ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இதனால் பாட்டில் தண்ணீரில் முன்னர் மதிப்பிடப்பட்டதை விட 100 மடங்கு அதிகமான பிளாஸ்டிக் துகள்கள் இருக்கலாம் என்று தற்போதைய கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.
`மைக்ரோபிளாஸ்டிக்ஸை விட நானோ பிளாஸ்டிக்குகள் மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இவை மனித செல்களுக்குள் ஊடுருவி ரத்த ஓட்டத்தில் கலந்து உறுப்புகளை பாதிக்கும். இந்த நீரை கர்ப்பிணிகள் குடிக்கும்போது, நஞ்சுக்கொடி வழியாக கருவில் உள்ள குழந்தையின் உடலுக்குச் சென்று பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது” என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
நீங்க குடிக்குற தண்ணீரில் பிளாஸ்டிக் இருக்கா?