கருத்து வேறுபாடு காரணமாக பொய் புகார் கூறுகிறார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி: கே.பி.முனுசாமி விளக்கம்..!

Share

சென்னை: கருத்து வேறுபாடு காரணமாக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பொய் புகார் கூறுகிறார் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கொளத்தூர் தொகுதி சீட் பெற்றுத்தர கே.பி. முனுசாமி ரூ.1 கோடி பணம் கேட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆடியோவை வெளியிட்ட பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கே.பி. முனுசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதலில் ரூ.50 லட்சம் தயார் செய்துவிட்டு, பிறகு 50 லட்சம் தருவதாக இருவரும் பேசும் ஆடியோ வெளியானது. பணத்தை வாங்க தனது மகனை அனுப்புவதாக கே.பி.முனுசாமி ஆடியோவில் பேசினார். இந்நிலையில் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியின் குற்றச்சாட்டுக்கு கே.பி.முனுசாமி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த விளக்கத்தில்; கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டது எனது குரல்தான். ஆனால் தேர்தல் செலவுக்காக பணம் கேட்டதை தவறாக திரித்து கூறுகின்றனர். ஆடியோ, வீடியோ எதை வெளியிட்டாலும் பயப்படப் போவதில்லை. கருத்து வேறுபாடு காரணமாக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பொய் புகார் கூறுகிறார். ஆடியோ எந்த தேதியில், எந்த சூழலில் பேசியது என்ற தகவல் இல்லை. எடப்பாடி கட்சியை காப்பாற்ற போராடி கொண்டிருக்கிறார். இந்த குற்றச்சாட்டை பெரிதாக கருதவில்லை, ஓ.பி.எஸ். மனசாட்சிக்கு என்னை பற்றி தெரியும் இவ்வாறு கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com