எனவே, அமெரிக்காவில் கருத்தடை மாத்திரைகள் மருத்துவ பரிந்துரையின்றி அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என பிரெஞ்சு மருந்தக நிறுவனமான ஹெச்.ஆர்.ஏ., அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளது. உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இதற்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், அமெரிக்க மக்கள் மருந்துசீட்டு இன்றி கருத்தடை மாத்திரைகளை பெற முடியும்.
1973-ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் உபயோகப்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட கருத்தடை மாத்திரை, ஓபில் (Opill). ஆனால் இந்த மாத்திரை மருந்துசீட்டு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும். இந்த மாத்திரைகளை ஓவர் தி கவுன்ட்டர் மருந்துகளாக வழங்குவதற்கு பல மருத்துவக் குழுக்கள் ஒப்புதல் அளித்துள்ளது.
ஓபில் மாத்திரைகளை ஓவர் தி கவுன்ட்டர் மருந்துகளாக வழங்குவது குறித்த முடிவை, உணவு மற்றும் மருந்து நிர்வாகம் 10 மாதங்களுக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.