தூத்துக்குடியைச் சேர்ந்தவர் வாசுகி. இவரின் கணவர் விவசாய கூலி வேலைகளைச் செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். 2013-ம் ஆண்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை (Tubectomy) செய்திருக்கிறார், வாசுகி.
இந்த நிலையில் 2014 மார்ச் மாதத்தில் கருத்தரித்து, 2015 ஜனவரியில், இவருக்குக் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறப்பைத் தடுக்க குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட நிலையிலும், மருத்துவரின் அலட்சியத்தால் குழந்தை பிறந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த வாசுகி, உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.
இந்த வாழ்க்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, “குடும்பக் கட்டுப்பாடு என்பது பல்வேறு அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் மூலம் செயல்படுத்தப்படும் தேசியத் திட்டம். அதைச் செயல்படுத்துவது நேரடியாக அரசாங்கத்தின் கைகளில் உள்ளது.
இதனைச் செயல்படுத்துவதற்கான பொறுப்பு மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டும், முழுமையான கருத்தடை அறுவை சிகிச்சை செய்யாமல் அலட்சியம் காட்டுவதால், இத்திட்டம் நாசமாகிறது.