“கரண் ஜோகரை மிரட்டி ரூ.5 கோடி பறிக்க திட்டமிட்டோம்!” – சித்து கொலையில் கைதானவர் பகீர் வாக்குமூலம் | person arrested in the murder of a Punjabi singer has said that he planned to extort money from Karan Johar.

Share

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மாதம் 29-ம் தேதி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக புனே போலீஸார் சிதேஷ் காம்ப்ளே என்று அழைக்கப்படும் மஹாகாலை கைதுசெய்துள்ளனர். அதோடு குஜராத்தில் சந்தோஷ் காம்ப்ளே, நாக்நாத் சூர்யவன்சி ஆகியோரையும் இந்தக் கொலை தொடர்பாக கைதுசெய்துள்ளனர். மஹாகாலிடம் டெல்லி சிறப்புப் படை போலீஸ், பஞ்சாப் போலீஸ் மற்றும் மும்பை போலீஸார் சித்து மூஸ்வாலா படுகொலை மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தந்தைக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

சித்து மூஸ்வாலா

சித்து மூஸ்வாலா

இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன. சித்து மூஸ்வாலா படுகொலையில் சந்தோஷ் ஜாதவ், நாக்நாத் சூர்யவன்சி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக மஹாகா தெரிவித்திருக்கிறான். அதோடு இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு டெல்லி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஸ்னோய் கூட்டத்தினரின் எதிர்கால திட்டம் குறித்தும் மஹாகால் போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறான். பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகரிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்ட திட்டமிட்டிருந்ததாக அவன் போலீஸாரிடம் கூறியிருக்கிறான்.

இது தொடர்பாக கனடாவில் இருக்கும் கோல்டி பிரரின் சகோதரர் விக்ரம் பிரர் தன்னிடம் இன்ஸ்டாகிராமில் ஆலோசித்ததாகவும் தெரிவித்திருக்கிறான்.

மேலும், போதைப்பொருள் கடத்தும் பெண் ஒருவரிடமும், சீக்கியர்களின் புனித நூலை அவமதித்த டாக்டர் ஒருவரிடமும் மிரட்டிப் பணம் பறிக்க திட்டமிட்டிருந்ததாகவும் மஹாகால் கூறியிருக்கிறான். மஹாகால் தெரிவித்த வாக்குமூலத்தின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுக்கும் திட்டத்தை வகுத்தது விக்ரம் பிரர் என்றும், அவன் தான் மூன்று பேரை மிரட்டல் கடிதத்துடன் மும்பைக்கு அனுப்பி வைத்தான் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

கரண் ஜோகர்

கரண் ஜோகர்

பஞ்சாப் பாடகர் படுகொலையை பயன்படுத்தி பாலிவுட் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை மிரட்டிப் பணம் பறிக்கவும் அவர்கள் திட்டமிட்டிருந்ததாக கூறும் போலீஸார், ரௌடிகள் பிரபலங்களின் விவகாரங்களில் தங்களது பெயர் அடிபடவேண்டும் என்று விரும்பியதாகவும் தெரிவித்தனர். பஞ்சாப் பாடகர் கொலையில் 5 முக்கிய கிரிமினல்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், ஆனால் சம்பவ இடத்தில் 5 பேருமே இல்லை என்றும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com