கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லா வசதிகளுடன் ரெஸ்டாரன்ட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கேரளா உணவுகளை அடிப்படையாக கொண்டு கட்டி இருக்காங்க. கட்டுனது என்னவோ கேரளா ஸ்டைலா இருந்தாலும் இங்கு அனைத்து வகையான உணவுகளும் கிடைக்கும்.
அட ரெஸ்டாரன்ட் என்றாலே சாப்பாடு தான் அதைத் தாண்டி இங்க என்ன இருக்கு அப்படின்னு கேட்டா இந்த ரெஸ்டாரன்ட் இருக்கக்கூடிய இடமே ஸ்பெஷல் தாங்க. உலகத்திலேயே அதிகம் காற்று வீசக்கூடிய இடத்தில் 2வது இடம் நம்ம கன்னியாகுமரி ஆரல் குமாரபுரம் தாங்க. அப்படிப்பட்ட இடத்தில் அதுவும் ஹைவேயில் திறந்த இடத்துல டேபிள் போட்டு அந்த இயற்கை காற்றோடு மிகப்பெரிய எல்இடி ஸ்கிரீன்ல பாட்டு படம் கிரிக்கெட் எல்லாம் பார்த்துகிட்டே நமக்கு பிடிச்சவங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணுற பாக்கியம் கிடைச்ச யார் தான் விட்டு வைப்பாங்க.
ஹைவேக்கு அருகில் இருக்கக்கூடிய இந்த உணவகம் ரோட்ல இருந்து கொஞ்சம் இறங்கி வந்ததுமே முதலில் பைக் பார்க்கிங் , கார் பார்க்கிங் என எல்லா வசதியும் இருக்கு. அப்படியே பைக்கை விட்டுட்டு கொஞ்சம் இறங்கி பார்த்தா நாஞ்சில் நாடு அப்படி என்று இவர்கள் வச்சிருக்கிற செல்பி பாயிண்ட் நாஞ்சில் நாடு சுவாசத்தை உணர வைக்கும் . அதன் அருகிலே மிகப்பெரிய காளை பொம்மை பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை கவர்ந்து இழுக்குது அப்படின்னு சொல்லலாம் இந்த ரெண்டுக்கும் நடுவுல செயற்கை நீரூற்று சும்மா அசர வைக்கும்.
கன்னியாகுமரியில் குழந்தைகளை கவரும் ரெஸ்டாரன்ட்
அப்படியே பக்கத்துல இருக்குற பேக்கரிக்கு போய் டீ காபி ஸ்நாக்ஸ் ஐட்டம் என்ன வேணா வாங்கி சாப்பிடலாம் அந்த பேக்கரிக்கு கொஞ்சம் மேல வந்தா மிகப்பெரிய எல்இடி ஸ்க்ரீன் அதில் ஓடிக் கொண்டிருக்கிற பாட்டு படம் எல்லாமே ரொம்ப அருமையா இருக்கும். மதிய நேரத்தில் வெயில் காரணமாக வெளியே உட்கார்ந்து சாப்பிட முடியாது அதுக்காக உள்ள ஒரு ரெஸ்டாரன்ட் வச்சிருக்காங்க.
அதுவே மாலை நேரம் காற்றோட்டமாக நமக்கு புடிச்ச உணவ புடிச்சவங்க கூட உட்கார்ந்து சாப்பிடுவதற்காக திறந்த வெளியில நிறைய டேபிள்ஸ் போட்டு ஒரு அருமையான ஓபன் செட்டப் நமக்கு ஒரு அருமையான மன அமைதி மன நிறைவையும் கொடுக்குது. நீங்க உங்க வீட்டு சுட்டி குழந்தைகளோட இந்த இடத்துக்கு வந்தா அவங்களுக்கு நேரம் போக்குவதற்காக இந்த ரெஸ்டாரன்ட் பின்னாடி மிகப் பெரிய குழந்தைகள் விளையாடக்கூடிய ஒரு பார்க் ஒன்னு கட்டி வச்சிருக்காங்க.
அங்கேயும் மிகப்பெரிய பார்க்கிங் வசதி ஒன்னு இருக்கு இந்த குழந்தைங்க பார்க்கல குழந்தைங்க கூட விளையாடும் பொழுது நீங்களும் உங்க வயசு மறந்து குழந்தைகளாகவே விளையாட ஆரம்பிச்சிடுவீங்க. மாலை நேரத்தில் குடும்பத்தோடு வெளி எங்கேயாவது சாப்பிட போகணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா குமாரபுரத்தில் இருக்கக்கூடிய இந்த ரெஸ்டாரன்ட் நீங்க தேர்வு செய்யலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.