கனமழை காரணமாக சென்னையின் சில பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை விரைந்து அகற்றிய தமிழ்நாடு அரசுக்கு விஜயகாந்த் பாராட்டு

Share

சென்னை: வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னையின் சில பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை விரைந்து அகற்றிய தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை தியாகராய நகர், வியாசர்பாடி பெரம்பூர், கொளத்தூர் மற்றும் சுரங்கப் பாதைகள், சாலைகள் நெடுஞ்சாலைகள், தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை உடனடியாக ராட்சத இயந்திரங்களைக் கொண்டுஅகற்றிய தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டிய உடனே தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு மக்கள் பாதிக்கப்படாதவாறு மழை நீரை உடனடியாக அகற்றி உள்ளது. சென்னை மாநகராட்சியை சகஜ நிலைக்கு திரும்பிக் கொண்டு வந்த தமிழக அரசுக்கும் மாநகராட்சிக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com