உளுந்தங்களி உருண்டை, ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு, பிரண்டைப் பணியாரம், பிரண்டை சாதம், வெந்தயக்கீரை சட்னி, புராணி ரைத்தா, டேட்ஸ் சாஸ், சிக்கன் லசானியா, ஆப்பிள் பீட்சா, மெக்சிகன் ரைஸ், தாய் கறி வரை என உள்ளூர் முதல் வெளியூர் வரை அனைத்து வகை உணவுகளையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இவை மட்டுமன்றி, தஞ்சாவூர் பாரம்பர்யமான சீராளங்கறி, பத்திய குழம்பு, இஞ்சித் தொக்கு, காயல்பட்டினம் வட்லாப்பம், திருவாதிரை களி, நவஅரிசிக் கஞ்சி, வெற்றிலை தேங்காய் லட்டு, வெற்றிலை வத்தக்குழம்பு என வகை வகையாக விருந்து படைத்திருந்தனர்.