உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆரம்பமாவதற்கு முன்பே நம்மை எல்லாம் கொண்டாட்ட மனநிலைக்கு தயார்படுத்துவதும், எதிர்பார்ப்பை கிள்ளிவிடுவதும் Anthem பாடல்கள் தான் மைதானத்தில் ஆட்டம் போடும் ரசிகர்களுக்கு ஒரு வாம் அப் தருவது போல் நம்மை இருக்கும் இடத்தில் ஆடவைக்க Anthems க்கு பெரும்பங்குண்டு
ஃபிஃபா கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக 1962ம் ஆண்டு சிலியில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரின் போது அதிகாரப்பூர்வமாக Anthem பாடல் வெளியிடப்பட்டது. The Rock of the world cup என்ற பாடல் ஃபிஃபாவின் முதல் Anthem- மாகும். இதற்கு பிறகு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கட்டாயமாகவே Anthem பாடல்கள் மாறிவிட்டது. போட்டியை நடத்தக்கூடிய நாட்டின் கலாச்சாரம், கால்பந்து வரலாறு, வெற்றியாளர்கள், சுவரஷ்யமான கோல் காட்சிகள், என நமது நான்கு வருட ஏக்கத்தீயில் எண்ணையை ஊற்றுகிறது. அந்தவகையில் நடப்பாண்டி நான்கு பாடல் வெளியிடப்பட்டுள்ளன.
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கலாச்சாரமாக மாறிவிட்ட Anthem பாடல்கள் ஆரம்பத்தில் போட்டியை நடத்தக்கூடிய நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியில் தயாரித்து பிறகு ஆங்கிலம் உட்பட மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. 2002க்கு பிறகு விளம்பரயுத்திக்காக நிறைய மொழிகளில் நிறைய கலைஞர்கள் மூலம் பாடல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது.
நிறைய பாடல்கள் சமூக கருத்துக்களையும், கலாச்சாரத்தையும் சுமந்துவந்து கால்பந்து விளையாட்டு மீதான ஈர்ப்பை மேலும் அதிகப்படுத்தியது. உலகக் கோப்பை கால்பந்து பாடல்கள் நம்மை கொண்டாட்ட மனநிலைக்கு அழைத்துச்சென்றாலும் வரலாறு மற்றும் பழைய நினைவுகளை கடத்தும் கலையாகவும் மிலிர்கிறது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.