கட்டணம் செலுத்த பள்ளிகள் நெருக்கடி – கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட நிதி எப்போது கிடைக்கும்?

Share

கட்டாயக்கல்வி உரிமை சட்டம், சென்னை உயர்நீதிமன்றம்,  மாணவர் சேர்க்கை, கல்வி, பள்ளிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சேர்க்கை அறிவிப்பே வெளியிடப்படவில்லை.

இந்த சட்டத்தின்கீழ், தமிழக அரசுக்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டிய ரூ.600 கோடியை விடுவிக்காமல் உள்ளதாகக் கூறிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், இதற்காக தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கின் தீர்ப்பு வெளியாகி, மத்திய அரசிடமிருந்து தொகை விடுவிக்கப்பட்ட பின், தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுவர் என்று கூறியுள்ளார்.

இதனால் இந்த ஆண்டில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் புதிய சேர்க்கை இருக்க வாய்ப்பில்லை என்பதோடு, ஏற்கெனவே இந்த இடஒதுக்கீட்டில் சேர்ந்து படித்து வரும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணமும் செலுத்தப்படாததால் மூன்றரை லட்சம் மாணவர்கள் தொடர்ந்து படிப்பதும் கேள்விக்குறியாக இருந்தது.

இந்நிலையில் இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்று (ஜூன் 10) வெளியானது. அதில், கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், தமிழக அரசுக்கு தரவேண்டிய நிதியை விடுவிப்பதைப் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com