கடலூரில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

Share

பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் (நரிக்குறவ சமூகத்தை) சேர்ந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள்‌ என 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை அதிகாலை மூன்று வயது பெண் குழந்தை மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தைப்பகுதியில் இருந்துள்ளார் குழந்தைகளின் தாய்.

அக்குழந்தைகளின் தாய் காணாமல் போய்விட்டார் என்று என தேடிய உறவினர்கள் அப்பெண்ணை கண்டுபிடித்த போது, அவரின் கையில் இருந்த 3 வயது பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தன. இதனைத் தொடர்ந்து அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com