கடலில் மூழ்கிய ஸ்பானிஷ் கப்பல்… 350 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட அரிய பொக்கிஷங்கள்! | Maravillas: 350-year-old Spanish shipwreck treasure haul goes on display in Bahamas

Share

கடல் தீர்க்கமுடியாத பல புதையல்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பது மறுக்கவே முடியாது. அந்த வகையில் தற்போது கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட புதையல் உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்க நாடான ஈக்வடாரிலிருந்து, ஸ்பெயினுக்கு அரச பொருள்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் ஒன்று மூழ்கியுள்ளது. அந்தக் கப்பலில் பல முக்கிய பொக்கிஷங்கள் இருந்ததால், மூழ்கிய கப்பலிலிருந்து எல்லா பொருள்களையும் மீட்க 1656-ம் ஆண்டு நியூஸ்ட்ரா செனோரா டி லாஸ் மாராவில்லாஸ் (The Nuestra Señora de las Maravillas) என்ற கப்பல் அனுப்பப்பட்டது.

கப்பல்

கப்பல்
ட்விட்டர்

அந்தக் கப்பலும், எல்லா பொருள்களையும் மீட்டுக்கொண்டு, வடக்கு பஹாமாஸில் வந்துகொண்டிருந்த போது, அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றப்பட்டதால் கடற்படையிலிருந்த மற்றொரு படகுடன் மோதி, ஜனவரி -4, 1656-ல் மூழ்கியிருக்கிறது. அதில் பல அரிய புதையல்கள் இருந்ததை அறிந்த நிபுணர் குழு அப்போதிலிருந்து அந்தக் கப்பலைத் தேடி வந்தது. அந்தத் தேடல் 1990- வரை நீடித்துள்ளது. 1656 முதல் 1990 வரையில் அந்தப் பகுதி கடலிலிருந்து கிட்டத்தட்ட 3.5 மில்லியன் பொருள்கள் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்பு தேடுதல் பணி கைவிடப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பொருள்கள்

மீட்கப்பட்ட பொருள்கள்
ட்விட்டர்

தற்போது மீண்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நவீன கருவிகளின் உதவியுடன் அந்தக் கப்பலைத் தேட தொடங்கியுள்ளது நிபுணர் குழு. இந்த நிலையில், அந்தக் குறிப்பிட்ட கப்பலிலிருந்து 2 மீட்டர் நீளமுள்ள தங்கச் சங்கிலி, மரகத கற்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கப் பதக்கம் உள்ளிட்டவற்றை ஆராய்ச்சியாளர்கள் மீட்டிருக்கின்றனர். இது பஹாமாஸ் அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 350 ஆண்டுகள் கழித்து அதன் ஒரு பகுதியில் இந்தப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com