சென்னை: ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல்!
Share