ஓ.பன்னீர்செல்வம் ஒருபோதும் கட்சிக்காக செயல்பட்டதில்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Share

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் ஒருபோதும் கட்சிக்காக செயல்பட்டதில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயக்குமார் அளித்த பெட்டியில்; ‘டிடிவி தினகரன் தேனியில் போட்டியிடவில்லை என்றால் ஓ.பன்னீர்செல்வம் யாரென்றே தெரிந்திருக்காது, ஜெயலலிதா மரணத்தில் விசாரணை கமிஷன் கேட்டது ஓ.பன்னீர்செல்வம்தான், ஆணையம் பலமுறை சம்மன் அனுப்பியும் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாமல் இறுதியில்தான் ஆஜரானார். கடைசியில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறிவிட்டார், கடந்த மக்களவை தேர்தலில் தன் மகனை வெற்றி பெற வைக்க பல கோடி செலவு செய்தவர் ஓ.பன்னீர்செல்வம், கட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டவர் ஓ.பன்னீர்செல்வம்’ என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com